10 ஆண்டுகளில் செய்யாததை…. 100 நாட்களில் முடிப்பேன் – கமல் சூளுரை…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.

நிலையில் கோவை தெற்கு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட கமல், “கோவை தெற்கு தொகுதியில் 10 ஆண்டுகளில் செய்யாதவற்றை 100 நாட்களை செய்து முடிப்பேன் என்று உறுதி அளித்துள்ளார். இனி கோவை தான் என் முகவரி. கோவை தெற்கு தொகுதியின் ஒவ்வொரு வார்டிலும் என்னுடைய அலுவலகம் அமைக்கப்படும். மக்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றபடும். மக்கள் நீதி மைய ஆட்சியில் வேலை தேடும் இளைஞர்கள் வேலை தரும் முதலாளி ஆவார்கள்” என்று கூறியுள்ளார்.