10 ஆண்டுகளா வீட்டுக்கு போகல… ! சடலமாக கிடந்த சந்திரன்… குமரியில் பரபரப்பு ..!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கூலித்தொழிலாளியின் சடலம் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

நாகர்கோவிலில் உள்ள இருளப்பபுரம் பகுதியை சேர்ந்தவர் சந்திரன். 60 வயதான இவர் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி மற்றும் மகன்களுடன் பிரச்சனை ஏற்பட்டு வீட்டிலிருந்து வெளியேறிய இவர் 10 ஆண்டுகளாக வீட்டிற்கு செல்வதில்லை. இருளப்பபுரம் வட்டாரத்தில் பல்வேறு இடங்களில் இரவு நேரங்களில் தங்கி விட்டு பகலில் கூலி வேலைக்கு சென்று வாழ்க்கை நடத்தி வந்தார்.

இந்நிலையில் காலை சந்திரனின் சடலம் பாதி தீப்பிடித்து எறிந்த நிலையில் நாகர்கோவில் பீச் ரோடு சந்திப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. சடலத்தை கைப்பற்றிய போலீசார் இது கொலையா ? அல்ல தற்கொலையா ? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். நாகர்கோவில் நகரில் முக்கிய சந்திப்பில் கூலித்தொழிலாளி தீப்பிடித்து எரிந்த நிலையில் சடலமாக காணப்பட்டு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.