வந்தவாசி அடுத்த சொன்னவரம் கிராமத்தில் 10ம் வகுப்பு மாணவி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. கொலை செய்து முட்புதரில் வீசப்பட்டிருந்த பள்ளி மாணவியின் உடலை கைப்பற்றிய போலீசார், லோகேஸ்வரன் (21) என்ற இளைஞரை பிடித்து விசாரித்து வருகின்றனர். மாணவி வன்கொடுமை செய்யப்பட்டாரா? அல்லது ஒருதலை காதல் விவகாரமா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது.