மல்டி டாஸ்கிங் தேர்வை தமிழ் உள்பட 13 மாநில மொழிகளில் எழுத மத்திய தேர்வாணையம் அனுமதி அளித்துள்ளது. எஸ்எஸ்சியில் இதுவரை ஆங்கிலம் மற்றும் இந்தி மட்டும் தேர்வு நடைபெற்ற நிலையில், தற்போது தமிழிலும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 11,409 காலி பணியிடங்களுக்கு 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் https://ssc.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த வாய்ப்பை தமிழக இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.
இந்த தேர்வை மாநில மொழியில் குறிப்பாக தமிழகத்தில் நடக்கும் தேர்வை தமிழ் மொழியிலும் நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.