நீச்சல் பழக சென்ற மாணவன்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. தர்மபுரியில் நடந்த சோகம்….!!!

கிணற்றில் நீச்சல் பழகிய போது பாலிடெக்னிக் மாணவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாலக்கோடு பகுதியில் அப்துல் சலாம் என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய மகன் முகமது அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களுடன் கிணற்றில் நீச்சல் பழக சென்றுள்ளார். இதனையடுத்து முகமது கிணற்றில் குதித்த போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி விட்டார். இந்நிலையில் வெகுநேரமாகியும் முகமது வெளியே வராதா காரணத்தினால் அதிர்ச்சியடைந்த நண்பர்கள் அவரை தேடி பார்த்துள்ளனர். இருப்பினும் கிடைக்கவில்லை.

பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை காப்பாற்ற முயன்ற போது தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரிய வந்தது. இதுகுறித்து தகவலறிந்த பாலக்கோடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவணின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *