“ரொம்ப நேரமா ஆள காணோம்” குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. புதுக்கோட்டையில் பரபரப்பு….!!!

மர்மமான முறையில் வாலிபர் உயிரிழந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள நம்பன்பட்டி கிராமத்தில் சுந்தரமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இதில் விவசாயியான இவர் மசாலா பொடி அரைக்கும் மில் ஒன்று நடத்தி வருகின்றார். இவருக்கு திருமணமாகி 2 மகன்களும், 1 மகளும் உள்ளனர். இந்நிலையில் பணிகள் முடிந்தவுடன் தனது சொந்தமான மில்லுக்கு சுந்தரமூர்த்தி சென்று விட்டு வீட்டிற்கு திரும்புவது வழக்கம். இந்நிலையில் அவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர்.

இருப்பினும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் சுந்தரமூர்த்தியின் மில்லுக்கு அருகிலேயே அவர் படுகொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த ஆலங்குடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *