நண்பர்களால் நடந்ததா… சாலையில் கிடந்த ஆட்டோ ஓட்டுநரின் சடலம்…. திருவள்ளூரில் பரபரப்பு….!!

மர்மமான முறையில் ஆட்டோ ஓட்டுனர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவேற்காடு சாலையில் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் வாலிபர் ஒருவரின் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே  திருவேற்காடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டுள்ளனர். மேலும் பிணமாக கிடந்த அவரின் தலை மற்றும் உடலில் வெட்டுக்காயங்கள் இருப்பதால் மர்மநபர்கள் அவரை வெட்டி கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து வாலிபரின் உடலை மீட்டு பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் திருவேற்காடு பகுதியில் வசித்து வந்த சண்முகம் என்பதும் அவர் மீது சிறு சிறு வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது.

மேலும் சண்முகம் ஆட்டோ ஓட்டி கூலி வேலை செய்துள்ளார். அதுமட்டுமல்லாது குடித்துவிட்டு மதுபோதையில் அந்தப்பகுதியில் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் தனது நண்பர்களுடன் ஒன்றாக அமர்ந்து மது அருந்திவிட்டு பேசிக் கொண்டிருக்கும் போது தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மது போதையில் நண்பர்கள் அவரை கொலை செய்து விட்டனரா என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *