“மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஊழியர்” மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்…. செங்கல்பட்டில் பரபரப்பு….!!!

மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஊழியரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள படாளம் பகுதியில் டார்பன் தயாரிக்கும் தொழிற்சாலையில் பால்ராஜ் என்பவர் ஒப்பந்த அடிப்படையில் தோட்ட வேலைகள் செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் வழக்கம் போல வேலைக்கு சென்ற பால்ராஜ் தொழிற்சாலையில் இருந்த கண்காணிப்பு கேமராவை சரி செய்து கொண்டிருந்த அலெக்சாண்டர் என்பவருக்கு உதவியாக இரும்பு ஏணியை பிடித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி பால்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குமாறு நிர்வாகத்திடம் உறவினர்கள் கேட்டுள்ளனர். ஆனால் நிர்வாகம் நிவாரணம் வழங்க மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் உடலை வாங்க மறுத்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவலறிந்த செங்கல்பட்டு டவுன் காவல் துறையினர் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *