“மீன் பிடிக்க சென்ற தொழிலாளி” குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. வேலூரில் நடந்த சோகம்….!!!

மீன் பிடிக்க சென்ற தொழிலாளி ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்திலுள்ள காட்பாடியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இதில் கூலித் தொழிலாளியான இவர் அடிக்கடி ஏரிக்கு மீன் பிடிக்க செல்வது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் மீன் பிடிப்பதற்காக ஏரிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் வெகு நேரமாகியும் முருகன் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர்.

இருப்பினும் அவர் கிடைக்கவில்லை. இதனையடுத்து ஏரிக்கரை அருகே அவரது இருசக்கரவாகனம் இருந்ததால் சந்தேகமடைந்த உறவினர்கள் அங்கு  சென்று பார்த்துள்ளனர். அப்போது ஏரியில் முருகன் சடலமாக மிதந்து கொண்டிருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது பற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *