“வீட்டின் மேற்கூரையை சரி செய்த நபர்” திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

வீட்டின் மேற்கூரையிலிருந்து தவறி விழுந்த நபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள பெருமுச்சி பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டின் சிமெண்ட் சீட் கூரை பகுதியை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது சீனிவாசன் தவறி கீழே விழுந்து விட்டார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சீனிவாசனின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *