“எங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்” சடலத்தை வைத்து போராட்டம்…. செங்கல்பட்டில் பரபரப்பு….!!!

மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் சடலத்தை வைத்து உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கூடுவாஞ்சேரியில் துரைப்பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு வழக்கம்போல சென்றுள்ளார். இந்நிலையில் தேவாலயத்தில் இருந்த ஜெனரேட்டர் அருகே செல்லும்போது திடீரென மின்சாரம் தாக்கி அவர் மயங்கி விழுந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவரது உடல் உடற்கூறு பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து உடற்கூறு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட அவரது உடலை பெற்றுக்கொண்ட உறவினர்கள் தேவாலயத்தின் வாசலில் வைத்து நிவாரணம் வழங்க கோரி திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த தாசில்தார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் இது பற்றி சம்பட்ட உயர் அதிகாரிகளிடம் பேசி நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன் பின்னர் மறியலில் ஈடுபட்ட உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *