“லாரியின் மேல்பகுதியில் உரசிய மின்கம்பி” ஓட்டுநருக்கு நடந்த விபரீதம்…. திருவள்ளூரில் பரபரப்பு….!!!

மின்சாரம் தாக்கி ஓட்டுனர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் சேர்ந்த முகமது ஷெரீப் இறைச்சிக்காக மாடுகளை லாரியில் ஏற்றிக்கொண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது கொல்லப்பள்ளி என்னும் கிராமம் அருகே லாரியை நிறுத்திவிட்டு அங்கிருந்து இறங்கியுள்ளார். மேலும் மழை பெய்துள்ளதால் தரை ஈரமாக இருந்த தோடு மின்கம்பி லாரியின் மேல்பகுதியில் உரசி உள்ளது. இதனால் லாரியில் இருந்து கீழே இறங்கிய அவரை மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்து குடியாத்தம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முகம்மது ஷரீபின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது பற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *