தற்கொலை செய்து கொண்டாரா….!! மூன்றாவது மாடியில் இருந்து விழுந்த ரயில்வே ஊழியர்…. திருவள்ளூரில் பரபரப்பு….!!!

மூன்றாவது மாடியிலிருந்து தவறி விழுந்த ரயில்வே ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவெற்றியூர் எல்லை கோவில் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 3-வது மாடியில் நந்த குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள ரயில் நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவருடைய மனைவி அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்ட நிலையில் தனியாக வீட்டில் இருந்துள்ளார். அப்போது அவர் வீட்டின் மொட்டை மாடியில் நின்று கொண்டிருக்கும் போது நிலைதடு மாறி திடீரென மூன்றாவது மாடியிலிருந்து கீழே தவறி விழுந்து விட்டார்.

இதில் படுகாயமடைந்த நந்தகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த  காவல்துறையினர் நந்தகுமாரின் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது பற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நந்தகுமார் குடிபோதையில் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்தார் அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்று பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *