கொத்தனார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஈச்சங்குடி பகுதியில் கொத்தனாரான அருண் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கீழவாசல் தெருவில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு குடி வந்துள்ளார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் அதிகமாக இருந்ததால் மஞ்சள்காமாலை நோய் ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த அருண் தனது வீட்டிலிருந்த விஷத்தை எடுத்து குடித்து மயங்கி கிடந்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அருண் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.