என்ன காரணமா இருக்கும்….? வெல்டர் எடுத்த விபரீத முடிவு…. செங்கல்பட்டில் பரபரப்பு….!!!

வெல்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஹரிஷ் என்பவர் தங்கி வெல்டராக பணி செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தங்கியிருந்த வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி ஹரிஷ் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மறைமலைநகர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *