“குடிக்கிறதுக்கு பணம் கொடுங்க” மனைவிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாப்பாரப்பட்டி பகுதியில் சின்னார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் முடிந்து பழனி அம்மாள், சின்ன பாப்பா என்ற 2 மனைவிகள் உள்ளனர். இதில் சின்னானுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. எனவே மது குடிப்பதற்காக தனது மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த சின்னார் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பாப்பாரப்பட்டி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *