“நிறைய தப்பு பண்றாரு” வசமாக சிக்கிய நபர்…. குண்டரில் தூக்கிய போலீஸ்….!!!

தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த வாலிபரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கொல்லம் பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீது காவல் நிலையத்தில் அடிதடி, திருட்டு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. கடந்த மாதம் ஒரு பெண்ணை வழிமறித்து ராஜேஷ் தங்கசங்கிலியை பறிக்க முயன்றுள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராஜேஷை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் இவரது தொடர் குற்றச் செயல்களை தடுக்க குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளார். இதனையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *