“கொரோனா காலத்தில் பள்ளியை திறந்து வைத்துள்ளார்கள்” அரசுக்கு எதிராக பேசிய வாலிபர்…. கைது செய்த போலீஸ்….!!!

பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக இருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பண்ணுர் பள்ளி அருகே காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஜோசப் என்ற வாலிபர் பள்ளி அருகே நின்று கொண்டு அந்த வழியாக வருவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார்.

மேலும் கொரோனா காலத்தில் பள்ளியை திறந்து வைத்து உள்ளார்கள் என்று அரசுக்கு எதிராக பேசி பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறாக சாலையில் நின்று கொண்டு ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். மேலும் இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். இது பற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஜோசப்பை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *