இளம்பெண்ணின் ஆபாச படத்தை இணையதளத்தில் வெளியிட்டு விடுவதாக கூறி வாலிபர் பணம் பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் 28 வயதுடைய இளம் பெண் திருமணமாகி தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இவருக்கு முகநூலின் மூலம் திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த விக்ரம் என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டது. அப்போது விக்ரம் இளம் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இதற்கிடையில் விக்ரமிற்கு மேலும் பல பெண்களுடன் தொடர்பு இருப்பதை அறிந்த இளம்பெண் அவருடன் தொடர்பை துண்டித்து விட்டார்.
இந்நிலையில் விக்ரம் எனக்கு ரூபாய் 10 லட்சம் தர வேண்டும் இல்லாவிட்டால் நாம் இருவரும் ஒன்றாக இருந்த ஆபாச படத்தை இணையதளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து இளம்பெண் வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விக்ரமை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.