“கத்தியை காட்டி மிரட்டல்” முதியவருக்கு நடந்த கொடுமை…. போலீஸின் அதிரடி நடவடிக்கை….!!!

முதியவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள சலவன்பேட்டையில் கூலித் தொழிலாளியான பழனி என்பவர் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் உள்ள எல்.ஐ.சி காலனி வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் திடீரென கத்தியை காட்டி மிரட்டி பழனிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு பழனி பணம் இல்லை என்று கூறினார். இதனையடுத்து மர்மநபர் பழனியின் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த ரூபாய் 3 ஆயிரத்தை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

எனவே இதுபற்றி பழனி வேலூர் வடக்கு காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்துள்ளனர். அதில் வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர் தோட்டப்பாளையம் பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் அவரை கைது செய்ததோடு அவரிடமிருந்த ரூ 3 ஆயிரம் பணம், 3 வீச்சருவாள், கத்தி, 1 1/2 கிலோ கிராம் கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *