“போதை பொருள் கடத்தல் வழக்கு” சோதனையில் சிக்கிய நபர்…. விமான நிலையத்தில் பரபரப்பு….!!!

போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக தேடி வந்த நபரை அதிகாரிகள் விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

சென்னை மீனம்பாக்கத்தில் பன்னாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கு மலேசியாவிலிருந்து விமானம் ஒன்று வந்துள்ளது. அதில் வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்த போது மகதரன் என்பவரை போதைப்பொருள் கடத்தல் தொடர்பு வழக்காக காவல்துறையினர் தேடி வந்தது தெரிய வந்தது.

பின்னர் அதிகாரிகள் அவரை கைது செய்து தனி அறையில் வைத்து விசாரணை நடத்தியதோடு போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். அதன்படி பெங்களூருவிலிருந்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு தனிப்படை காவல்துறையினர் சென்னை வந்து மகதரனை அழைத்து செல்வார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *