1…. 2….3….. ”எல்லாமே வேஸ்ட்” நொந்து போன ராகுல் …!!

கேரளா வயநாட்டில் ராகுல் காந்தி  மக்களிடம் பேசும் போது அடுத்தடுத்து மைக் வேலை செய்யாததால் அவர் நொந்து போயினார்.

தென்மேற்கு பருவமழையால் கேரளாவில் ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை கனமழை பெய்தது.இதனால் 150 பேர் வரை உயிரிழந்தனர். கடுமையாக ஏற்பட்டுள்ள நிலச்சரிவை சரி செய்து தற்போது நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றது. அங்குள்ள வயநாடு மக்களவை தொகுதியும் கடுமையாக பாதிப்புக்குள்ளாகியுள்ளது. கன மழை பெய்த தொடக்கத்திலேயே ராகுல் காந்தி கடந்த 11 – 14 ஆகிய தேதிகளில் வயநாடு பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்தார்.

Image

 

இந்நிலையில் இரண்டாவது முறையாக 3 நாட்களை பயணத்தை ராகுல் காந்தி மேற்கொண்ட ராகுல் காந்தி வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்ட பல்வேறு பகுதி பார்வையிடுட்டார். அங்குள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

Image

நேற்று ராகுல் அங்குள்ள முகாம்களில்  தொண்டர்கள் மத்தியில் பேச முயன்றார். அப்போது  பேசுவதற்காக வைக்கப்பட்டிருந்த மைக் வேலை செய்யவில்லை. இதையடுத்து அடுத்தடுத்து 3 மைக்குகள் ராகுல் கமதியிடம் கொடுக்கப்பட்டது. அதுவும் வேலை செய்யாததால் அங்கு குழப்பமான சூழல் ஏற்பட்டது. கடைசியாக 4 வது கொண்டுவந்த மைக்கே ராகுலுக்கு கை கொடுத்தது. அதில் அவர் உரையாற்றினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *