உலக அளவில் மிகப்பெரிய பணக்காரர்களுள் ஒருவராக இருப்பவர் அம்பானி. இவர் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராக இருந்த நிலையில் சமீபத்தில் அதானி முதலிடத்தை பிடித்தார். இதனால் இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 2-ஆம் இடத்தில் இருக்கிறார். இந்நிலையில் தற்போது முகேஷ் அம்பானி சொந்தமாக ஒரு விமானத்தை வாங்கியுள்ளார். அதன்படி போயிங் 737 MAX 9 என்ற விமானத்தை வாங்கியுள்ளார். இதன் விலை சுமார் ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.

இந்த விமானம் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட நிலையில் 11770 கிலோமீட்டர் வேகம் நிற்காமல் செல்லலாம். இந்த விமானத்தின் உள்கட்டமைப்பு சுவிட்சர்லாந்து அனுப்பப்பட்டு பல கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு மாற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே அம்பானியிடம் 10 ஜெட் விமானங்கள் மற்றும் 2 ஹெலிகாப்டர்கள் இருக்கிறது. இதைத்தொடர்ந்து தற்போது புதிதாக விமானத்தையும் வாங்கியுள்ளார். மேலும் இந்தியாவில் எந்த ஒரு பணக்காரரிடமும் இவ்வளவு விலை உயர்ந்த விமானம் சொந்தமாக கிடையாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.