‘1 ஆள்’ ‘3 துப்பாக்கி’ 11 காவல் அதிகாரிகளை சுட்டு வீழ்த்திய கடத்தல்காரன்..!!

அமெரிக்காவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்த காவல்துறையினர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. 

அமெரிக்கா, பிலடெல்பியாவையடுத்த குடியிருப்பு பகுதியில் போதை கடத்தல் கும்பல் நடமாட்டம் காணப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி காவல்துறையினர் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது கடத்தல்காரன் ஒருவன் வீடு ஒன்றில் வெளியே நிறுத்தப்பட்ட லாரி மீது துப்பாக்கியால் சுட்டு குடியிருப்புவாசிகளை அச்சுறுத்தி உள்ளான். மேலும் அவனது கையில் AK47 துப்பாக்கி , செமி ஆட்டோமேட்டிக் துப்பாக்கி மற்றும் கை துப்பாக்கிகள் இருந்தன.

Image result for america gun shoot police

இதனை கண்ட காவல்துறையினர் துப்பாக்கிகளை கீழே போட்டு சரணடையும் படி அறிவுறுத்தினார். அதனை கேட்க மறுத்த  அந்த நபர் காவல்துறையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 11 அதிகாரிகள் படுகாயம் அடைந்தனர். மேலும் வீட்டில் இருந்த இரு நபர்கள் மற்றும் 3 காவலர்களை கடத்தல்காரன் சிறை வைத்து அச்சுறுத்தல் விடுத்துள்ளான். இதனால் நேரடி தாக்குதல் நடத்த முடியாமல் தவித்த காவல்துறையினர் ரகசியமாக உள்ளே நுழைந்து அவனை மடக்கிப் பிடித்து ஐந்து பேரையும் பத்திரமாக மீட்டனர்.  தற்பொழுது காவல்துறையினரிடம் சிக்கியுள்ள அந்த நபர் அப்பகுதியை சேர்ந்த மகரிஷி என்றும் அவர் மீது போதை கடத்தல் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் ஏற்கனவே இருப்பதும் தெரியவந்துள்ளது.