1 லிட்டர் பெட்ரோல் ரூ 40 ….. நாளைக்கே குறைக்கிறேன்….பாஜகவினர் யாரும் போட்டியிட கூடாது….சவால் விடும் வேட்பாளர்….!!

அமைச்சர் பதவியை என்னிடம் இன்று கொடுத்தால் நாளை மறுநாளே பெட்ரோல் விலையை குறைத்து காட்டுவேன்’என்று திமுக வேட்பாளர் T.R பாலு  தெரிவித்துள்ளார்.

 மக்களவை தேர்தலுக்கான பிரசாரம் சூடுபிடித்துள்ளது .  திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக தி.மு.க_வின் T.R பாலு அறிவிக்கப்பட்டுள்ளார் . இந்நிலையில் சென்னையை அடுத்ததுள்ள குரோம்பேட்டையில் வேட்பாளர் அறிமுகம் மற்றும் பிரசார தொடக்க கூட்டம் நடைபெற்றது. இதில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள அனைத்து கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Image result for லிட்டர் பெட்ரோல்

இதில் பேசிய வேட்பாளர்  T.R பாலு  கூறுகையில் , 1 லிட்டர் பெட்ரோலானது தற்போது  ரூபாய் 74.75–க்கு விற்பனை செய்யப்படுகின்றது .இந்த விலையானது நியாயமானது கிடையாது . நான், 1996_ஆம் ஆண்டில் பெட்ரோலிய துறை அமைச்சராக இருக்கப்போய் சொல்கிறேன். இன்னு என்னிடம் அதே பொறுப்பை கொடுங்கள் நாளை கலைக்கும் பெட்ரோல் விலையை ரூபாய் 40_ஆக குறைத்து காட்டுகின்றேன் . நான் இங்கு சவால் விடுகிறேன். ரூபாய் 40_க்கு ஒரு லிட்டர்  பெட்ரோலை கொடுத்து விட்டால்  பாஜகவினர் யாரும் தேர்தலில் நிற்கக்கூடாது என்று சவால் விடுத்தார்.