1.9 கோடி இந்தியர்கள் வேலை இழப்பு…!!

கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரை ஒரு கோடியே 90 லட்சம் இந்தியர்கள் வேலையை இழந்துள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் ஆய்வறிக்கை கூறியுள்ளது.

இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் வேலை இழப்பு குறித்து  ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கொரோனா தொற்று நோயால் ஊரடங்கு காரணமாக கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரை குறைந்தது ஒரு கோடியே 90 லட்சம் இந்தியர்கள் வேலை இழந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலையிழப்பில் சுயதொழில் செய்பவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆய்வின்படி சுயதொழில் செய்பவர்களின் கிட்டத்தட்ட 86 விழுக்காட்டினர் பொது முடக்கம்  காரணமாக வருமான இழப்பை சந்தித்துள்ளனர். 25 விழுக்காட்டினர் தங்கள் வருமானம் பூஜ்யமாக குறைந்து விட்டதாக கூறினர். 28 விழுக்காட்டினர் தற்போது நிலவும் நெருக்கடி காரணமாக வருமானம் பாதிக்குமேல் குறைந்துள்ளதாக கூறியுள்ளனர். மாத ஊதியம் பெறுகிறவர்கள்  30 விழுக்காட்டினர் ஊதியம் பாதிக்கும் மேலாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், 12 விழுக்காட்டினர் வேலை இழப்பு காரணமாக முழு ஊதியத்தையும் இழந்துந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் 70 விழுக்காட்டினர் வருமானம் 50 முதல் 100 விழுக்காடு வரை குறைந்துள்ளது. முழுமையான வருமான இழப்பை சந்தித்தவர்களில் மும்பை முதலிடத்தில் உள்ளது. அங்கு 26 விழுக்காட்டினர் வேலையை முழுவதுமாக இழந்துந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *