1.680 கிலோ தங்கம், ரூ.14.96 லட்சம்…. வசமாக சிக்கிய அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ…!!!

கே.பி.பி. பாஸ்கர் தொடர்புடைய இடங்களில் 1.6 கிலோ தங்கம், ரூ.14.9 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ கே.பி.பி பாஸ்கர் பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.72 கோடி மதிப்புடைய சொத்துகளை சேர்த்துள்ளார். இது அவரதுவருமானத்தை விட 315% அதிகமாகும். எனவே இது தொடர்பாக நாமக்கல் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு வழக்கு பதிவு செய்து அவருக்கு சொந்தமான இடங்கள், அவரது உறவினர்கள், நெருங்கிய தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்ட நபர்களின் இருப்பிடம் உட்பட மொத்தம் 26 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

நேற்று காலை தொடங்கிய ரெய்டு மாலை 6.30 மணிக்கு நிறைவடைந்தது. இந்நிலையில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.பி. பாஸ்கர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில், 1.680 கிலோ தங்கம், 6.6 கிலோ வெள்ளி, ரூ.14.96 லட்சம் ரொக்கம், சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 20 லட்சம் ரூபாய் வரை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ததற்கான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *