ஜெர்மனி நாட்டில் d-ticket எனப்படும் பயணச்சீட்டு திட்டம் கடந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது ஜெர்மனி வெறும் 9 யூரோக்கள் விலையுடைய பயணச்சீட்டு ஒன்றை அறிமுகம் செய்திருந்தது. இந்தப் பயணச்சிடு முறை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த ஆண்டும் அதே பயண சீட்டு கிடைக்குமா என்று மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். ஆனால் இம்முறை மாதம் ஒன்றிற்கு 49 யூரோக்கள் உடைய பயணச்சீட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது ஒரு நாள் பயணம் செய்வதற்கு ஒருவருக்கு 1.58 யூரோக்கள் மட்டுமே செலவு செய்ய வேண்டும். இந்த பயணச்சீட்டு முறை வரும் ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதியிலிருந்து விற்பனைக்கு வருகின்றது. அதோடு மே மாதத்தில் இருந்து இந்த பயணச்சீட்டை பயன்படுத்தி ஜெர்மனி முழுக்க பயணம் செய்யலாம். ஆனால் அதில் ஒரு சிக்கல் உள்ளது. இந்த பயணச்சீட்டை பயன்படுத்தி அதிவேகம் மற்றும் தொலைதூர ரயில்கள் தவிர மற்ற அனைத்து போக்குவரத்து சாதனங்களிலும் பயணம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.