ரூ 1.50 கோடி பணம் பறிமுதல்….. அமமுக துணை செயலாளர் கைது….. 150 பேர் மீது வழக்கு வழக்குப்பதிவு…!!

ஆண்டிப்பட்டி அமமுக அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையை தடுத்ததாக 150 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள  அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று இரவு 8.30 மணியளவில் தீடிர் சோதனை நடத்தினர். இந்த சோதனை விடிய விடிய நடைபெற்றது. அப்போது திடீரென 50-க்கும் மேற்பட்ட அ.ம.மு.க.வினர் அங்கு திரண்டு சோதனையில் ஈடுபட்ட போலீசார் மற்றும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வருமானவரி சோதனை க்கான பட முடிவு

இதில் அமமுக_வினர் அதிகாரிகளை சோதனை செய்ய விடாமல் தடுத்து நிறுத்தினர். மேலும் அங்கே இருந்த பணத்தை அள்ளி செல்ல முயன்றதாகவும் சொல்லப்படுகின்றது. அமமுக_வினரை போலீசார் கட்டுப்படுத்த முயன்றும் தொடர்ந்து அவர்கள் தகராறு செய்ததால் அவர்களை விரட்டுயடிப்பதற்காக அங்கே இருந்த  துணை ராணுவப்படையினர் வானத்தை நோக்கி 4 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பணம் க்கான பட முடிவு

இரவு முழுவது நடைபெற்ற இந்த சோதனையில் சுமார் 1.50 கோடி பணம் கைப்பற்றப்பட்டது.  மேலும் பணம் வைத்திருந்ததாக கூறி அமமுக மாவட்ட துணைச்செயலாளர் பழனி, கமன்ராஜ், பிரகாஷ், மது ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதில் வருமான வரிசோதனையை  தடுத்தல் , கொலை முயற்சி , பணத்தை திருடுதல் போன்ற 7  பிரிவுகளில் அமமுக_வினர் 150 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.