பெண்ணின் வயிற்றில்இருந்த 1.5 கிலோ தங்கம் , நாணயங்கள் மீட்பு…..!!

மேற்குவங்க மாநிலத்தில் இளம்பெண் வயிற்றில் இருந்து 1.5 கிலோ எடை வரை தங்கம் மற்றும் நாணயங்கள் எடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேற்கு வங்க மாநிலத்தின் பீர்பம் மாவட்டத்தில் உள்ள ராம்பூரத் நகரில் இருக்கும் கிராமத்தில் வசித்து வந்த 26 வயதுடைய இளம்பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படார். அவர் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அந்த இளம்பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்தனர். அப்போது அந்த பெண்ணின் வயிற்றில் இருந்து சுமார் 1.5 கிலோ எடை வரை 90 நாணயங்கள் , சிறு சிறு  தங்க நகைகள் வெளியே எடுக்கப்பட்டன.

இளம்பெண்ணின் வயிற்றில் இருந்து 1.5 கிலோ எடையுள்ள நகை, நாணயங்கள் நீக்கம்

அதில் செப்பு மற்றும் பித்தளையால் செய்யப்பட்ட ரூ.5, ரூ.10 ஆகிய மதிப்புகளை கொண்ட நாணயங்கள் , சங்கிலி, மூக்கு வளையம், காதணி, வளையல் மற்றும் கடிகாரம் உள்ளிட்ட பொருட்களும் அடங்கும். இது குறித்து அந்த பெண்ணின் தாயார் கூறுகையில் ,  எனது மகள்   மனநிலை பாதிக்கப்பட்ட எங்கள் வீட்டில் உள்ள நகைகள் காணாமல் போயின.இந்த பொருட்களை தனது மகள் விழுங்கியது  தற்போது தான் எங்களுக்கு தெரியவந்துள்ளது என்று தெரிவித்தார்.