1 முதல் 12-ஆம் வகுப்பு வரை….. “பள்ளிப் பாடத் திட்டத்தில் யோகா”….. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!

பள்ளிப் பாடத் திட்டத்தில் யோகாவை சேர்க்க வேண்டுமென கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சிலுக்கு மத்திய கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பரிந்துரை செய்துள்ளார். டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் மனித இனத்திற்கு யோகா  பெரும் உதவியாக இருந்தது என்று கூறினார். எனவே குழந்தை பருவ கல்வி முதல் 12-ஆம் வகுப்பு வரை யோகாவிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். வரும் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பல  ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.