தமிழக மீனவர்களுக்காக புதிதாக கட்சி ஒன்றை தொடங்க உள்ளதாக அனைத்து மீனவர்கள் சங்க தலைவர் நாஞ்சில் ரவி தெரிவித்துள்ளார். திருவள்ளூர் முதல் குமரி வரை உள்ள 610 மீனவ கிராமங்களை ஒன்றிணைத்து ஒற்றை தலைமையில் கீழ் கட்சி உருவாக்கப்படும் என கூறிய அவர், இதற்காக சட்ட வல்லுனர் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது என்றார். முன்னதாக மீனவர்களை காக்க அதிமுக மற்றும் திமுக கட்சிகள் உதவவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.