மிகவும் அரிதான பச்சைநிற வால் நட்சத்திரமானது 50 ஆயிரம் வருடங்களுக்கு பின் முதன் முறையாக பூமிக்கு மிக அருகே வர இருக்கிறது. இந்த நட்சத்திரம் பூமியை நெருங்கி வருவதாக விண்வெளி ஆய்வாளர்கள் சென்ற வருடம் மார்ச்சில் கண்டுபிடித்தனர். கடந்த 2022ம் வருடம் மார்ச் மாதம் வியாழனின் சுற்றுப் பாதையில் இருந்த போது பனிக்கட்டி பார்வையாளர் பச்சை வால் நட்சத்திரத்தை முதல் முதலில் அறிந்ததாக நாசா அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா கூற்றுபடி, அரிதான இந்த நட்சத்திரத்திற்கு சி/2022 இ3 (இசட்.டி.எம்.) என பெயரிட்டு உள்ளது. இந்நிலையில் பச்சை வால் நட்சத்திரம் வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி பூமிக்கு மிக அருகே வந்து கடந்து செல்லும். அந்நேரத்தில் அது பூமியில் இருந்து சுமார் 2 கோடியே 60 லட்சம் மைல்கள் தொலைவில் இருக்கும் என பிளானெட்டரி சொசைட்டி தெரிவித்து உள்ளது.