1 இல்ல 2 இல்ல…. 5 மொழிகளில் சமந்தா படத்தின் டீசர் வெளியீடு…. வைரலாக்கும் ரசிகர்கள்….!!!!

நடிகை சமந்தா நடிப்பில் இப்போது “யசோதா” என்ற பான் இந்தியா படம் தயாராகி வருகிறது. இத்திரைப்படத்தை இயக்குனர்கள் ஹரி-ஹரிஷ் இயக்குகின்றனர். வரலட்சுமி சரத்குமார், உன்னிமுகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உட்பட பலர் இந்த படத்தில் நடித்து இருக்கின்றனர். திரில்லர் வகை கதை அம்சம் கொண்ட இத்திரைப்படத்தில் சமந்தா எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை சிவலெங்க கிருஷ்ண பிரசாத் தன் ஸ்ரீதேவி மூவிஸ் நிறுவனம் வாயிலாக தயாரித்து உள்ளார். இதற்கு மணிஷர்மா இசையமைத்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி இருக்கும் இப்படத்தின் டீசர் இன்று (09-09-2022) காலை 10.24-க்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அந்த வகையில் இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது. கர்ப்பிணி பெண்ணாக உள்ள சமந்தாவிற்கு வரும் இன்னல்களை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதை கதைக் கருவாக வைத்து உருவாகியுள்ள இந்த டீசர் 5 மொழிகளில் வெளியாகி சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.