1 இல்ல 2 இல்ல…. 3 ஆண்களை ஏமாற்றி லட்சக்கணக்கில் நகை, பணத்தை பறித்த பெண்…. பரபரப்பு….!!!!

ஆந்திர மாநிலம் நந்தியால் மாவட்டம் பகுதியில் மேரம்மா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் திரிஷாவுக்கும் (24) ஆவுக்கு பேட்டை, சென்னம் பள்ளியை சேர்ந்த மல்லிகார்ஜுன் என்பவருக்கும் முதல் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து மல்லிகார்ஜுடன் சில மாதங்கள் மட்டுமே வாழ்ந்த திரிஷா அவரை விட்டு பிரிந்து தன் தாய் வீட்டிற்கு வந்தார். அப்போது தன் கணவரிடமிருந்து விவாகரத்து வாங்காமலேயே பல்வேறு லட்சங்களை பறித்துக்கொண்டு அவர் வந்துள்ளார். அதன்பின் அத்மகூர் மண்டலம் கொத்த பள்ளியை சேர்ந்த சீனிவாஸ் ரெட்டி என்பவரை திரிஷா 2வதாக திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் இவரிடமும் திரிஷா சில மாதங்கள் மட்டுமே குடும்பம் நடத்தினார். கணவன்-மனைவி இடையில் குடும்பத்தகராறு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அவரையும் பிரிந்துவிட்டு வீட்டில் இருந்த நகை பணத்தை எடுத்துக்கொண்டு தன் தாய் வீட்டிற்கு வந்து விட்டார். இதனிடையில் ரங்காபுரத்தை சேர்ந்த மகேஸ்வரர் ரெட்டி என்பவரின் மனைவி ஏற்கனவே இறந்து விட்டார். ஆகவே மனைவி இறந்து விட்டதால் மகேஸ்வர் ரெட்டி திரிஷாவை திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார்.

சென்ற பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி திரிஷா பெயரில் பேங்க் அக்கவுண்டில் ரூபாய் 5 லட்சத்தை மகேஸ்வர் ரெட்டி டெபாசிட் செய்தார். இதனையடுத்து இருவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. அதன்பிறகு திருமணமான சில நாட்களிலேயே மகேஷ்வர் ரெட்டி வீட்டிற்கு திரிஷாவின் தாயார் மேரம்மா வந்தார். அப்போது தன்னுடைய மகள் பெயரில் வீடு நிலங்களை பதிவுசெய்து கொடுத்தால் மட்டுமே திரிஷா உன்னுடன் குடும்பம் நடத்துவார்.

இல்லையென்றால் திரிஷாவை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து செல்வதாக மகேஸ்வர ரெட்டியிடம் மேரம்மா தெரிவித்தார். இதன் காரணமாக சந்தேகமடைந்த மகேஸ்வர் ரெட்டி திரிஷா பற்றி பல இடங்களில் விசாரணை மேற்கொண்டார். அந்த விசாரணையில் திரிஷாவுக்கு முன்பே இரண்டு பேருடன் திருமணம் நடந்தது தெரியவந்தது. பின் திரிஷா அவரது தாயார் தொடர்பாக போலீஸ் நிலையத்தில் மகேஸ்வர் ரெட்டி புகார் செய்தார். அதன்படி சப் இன்ஸ்பெக்டர் சீனிவாஸ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகவுள்ள திரிஷா மற்றும் அவரது தாயாரை தேடி வருகிறார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *