1 இல்ல 2 இல்ல 100 முறை….. பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி…. கொடூரம்…!!!!

மேற்கு வங்காளத்தை சேர்ந்த பெண் ஒருவர் 7 ஆண்டுகளுக்கு முன்பு தனது 15 வயதில் சமூக ஊடகம் மூலம் அறிமுகமான ராகுல் என்ற வாலிபரை சந்திக்க சென்றுள்ளார். ஆனால் ராகுல் சிறுமியை ரூ.15 லட்சத்துக்கு ஒருவருக்கு விற்பனை செய்துள்ளார். பின்னர் சிறுமி பீகாரில் கமல் என்பருக்கு விற்கப்பட்டார். அவரோ உத்தரபிரதேசத்தை சேர்ந்த சித்ரா என்வரிடம் சிறுமியை விற்றுள்ளார். சித்ரா, சிறுமியை தனது 45 வயது சகோதரனுக்கு வலுக்கட்டாயமாக ‘திருமணம்’ செய்து வைத்தார்.

இந்த நேரத்தில்சிறுமி தனது தாயாரை தொடர்பு கொண்டு இது குறித்து தகவல் தெரிவித்து உள்ளார். இதற்கிடையில் போலீசார் ராகுலை கைது செய்தனர். இதனால் பயந்த சித்ரா சிறுமியை கமலிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து சித்ராவும் கைது செய்யப்பட்டார். இதை அறிந்த கமலும் அவரது உதவியாளரும் ஆத்திரத்தில் சிறுமியை பலமுறை பலாத்காரம் செய்து, காசிபூர் ரெயில் நிலையத்தில் விட்டுவிட்டு தப்பிச் சென்றனர். அங்கிருந்து போலீசார் சிறுமியை மீட்டபோது அவரால் பேச முடியவில்லை.

பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி தற்போது கல்லூரியில் படிக்கிறார். ஜனவரி 2015இல் வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுமி மே 2015இல் மீட்கப்பட்ட போது நூற்றுகணக்கான முறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருந்தார். இது குறித்த வழக்கில் 4 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் மேலும் இருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.