1இல்ல.. 2இல்ல… 19 மாவட்டங்களுக்கு மழை- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு …!!

தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வால் குமரி மற்றும் நெல்லையில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. அந்தமானில் இன்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுதினம் திங்கட்கிழமை தாழ்வு மண்டலமாக வலுப்பெற இருப்பதாகவும், இதன் காரணமாக தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, மதுரை, விருதுநகர், தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 19 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மிதமான மழையும் இன்று பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *