1இல்ல…2இல்ல…. ”இது 5ஆவது” எல்லாமே ”அவுங்க தான்” கொணடாடும் கழகத்தினர் ..!!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்திக்கும் என ABP மற்றும் CVoter  நடத்திய கருத்துக் கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது .

தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு , பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ளன. இதில் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது .மே2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, அன்றே முடிவு அறிவிக்கப்படுகிறது. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் குறித்து ABP மற்றும் CVoter  இணைந்து கருத்துக்கணிப்பு நடத்தி உள்ளனர்.

அதில் ஆளும் அதிமுக படுதோல்வியை சந்திக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், தமிழக மக்கள் தற்போதைய அதிமுக அரசு மற்றும் முதலமைச்சர் திரு பழனிசாமியின் செயல்திறன் மீது அதிருப்தியில் உள்ளதாகவும், தற்போதைய அரசாங்கத்தை மாற்ற 48 சதவீதம் பேர் ஆதரவாக உள்ளதாகவும், ABP மற்றும் CVoter கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இதற்கு முன்பு வெளியான 4கருத்துக்கணிப்பிலும் திமுகவே வெற்றி பெரும் என தெரியவந்துள்ளதால் கழக உப்பிக்கள் மிகவும் உற்சாகமாக இருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *