1½ ஆண்டுகளாக தலைவர் இல்லாமல் கட்சி எப்படி செயல்பட முடியும்..? கபில்சிபல் விமர்சனம்..!!

ஒன்றை ஆண்டுகாலம் காங்கிரஸ் கட்சியில் தலைவர் இல்லாமல் கட்சி எப்படி செயல்பட முடியும்? என்று கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் குறித்து ஏற்கனவே 23 மூத்த அமைச்சர்கள் விமர்சனம் செய்து சோனியாவிற்கு கடிதம் எழுதியிருந்தனர். இந்நிலையில் தோல்வி தொடர்பாக மூத்த தலைவர் கபில்சிபல் கடுமையாக விமர்சித்துள்ளார். அவருக்கு மற்ற தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கபில்சிபல் மீண்டும் ஆட்சியை குறை கூறி கருத்து தெரிவித்துள்ளார். டிவி ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர் கூறியிருப்பதாவது: “காங்கிரஸ் கட்சியின் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகுவதாக அறிவித்த பிறகு இன்றுவரை புதிய தலைவர்கள் நியமிக்கப்படவில்லை.

ஒன்றரை ஆண்டு காலமாக கட்சித் தலைவர்கள் இல்லாமலேயே கட்சி எப்படி செயல்பட முடியும்? கட்சி எந்த வழியில் செல்கிறது என்று தொண்டர்களுக்கு தெரியவில்லை. உத்தரப்பிரதேசம் போன்ற சில மாநிலங்களில் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் ஒரு தொகுதியிலும் கூட அவர்களால் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. குஜராத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால் ஏற்பட்ட 8 காலியிடங்களில் தேர்தல் நடந்தது. ஒன்றில் கூட அவரால் வெற்றிபெற முடியவில்லை.

65 சதவீத ஓட்டுகள் பாரதிய ஜனதாவிற்கு சென்றன. மத்திய பிரதேசத்தில் 28 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததன் மூலம் அங்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 8 தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது . பாரதிய ஜனதா கட்சியுடன் மோதக் கூடிய தகுதி உள்ள கட்சியாக காங்கிரஸ் காட்டிக் கொள்ள முடியவில்லை .கட்சி தவறான இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதில் ஏதாவது மாற்றம் ஏற்பட வேண்டும்” என்று கபில் சிபில் விமர்சித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *