இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் ஸ்மார்ட் போன் பயன்படுத்த தொடங்கி விட்டனர். அதனால் அனைத்து தகவல்களையும் ஸ்மார்ட் போன் மூலமாகவே பெற்று விடுகிறார்கள். ஆனால் ஸ்மார்ட்போன் மூலமாக தினந்தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

இது தொடர்பாக அரசும் மக்களுக்கு பல எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்ட வருகிறது. அதன்படி பிரதான் மந்திரி பெரோஜ்கரி பட்டா யோஜனா என்ற திட்டத்தின் கீழ் வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம்தோறும் மத்திய அரசு 6000 ரூபாய் தரப்போவதாக வாட்ஸ் அப்பில் தகவல் ஒன்று பரவி வருகிறது. இந்தச் செய்தி உண்மையில்லை என மத்திய அரசு மறுத்துள்ளது. மத்திய அரசிடம் இது போன்ற திட்டங்கள் எதுவும் இல்லை என்றும் அதனால் யாரும் அது போன்ற செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.