ஆந்திர மாநிலம் அச்சுதாபுரம் என்னும் பகுதியில் Escientia என்ற மருத்துவ நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு நேற்று எதிர்பாராத விதத்தில் நிறுவனத்தில் இயங்கி வந்த அணு உலை வெடித்துள்ளது. இதனால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக 15 பேர் உயிரிழந்ததுடன் பலர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மருத்துவர்கள் அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 1 கோடி இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளார். அதன்பின் அவர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தையும் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தையும் நேரில் சென்று  பார்வையிட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

மேலும் படுகாயமடைந்த குடும்பத்தினருக்கு தலா 50 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 25 லட்சமும் வழங்குவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அவரது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.