தவெக தலைவர் விஜய், கட்சியின் பொதுக் கூட்டங்கள் மற்றும் பேரணிகளை சிறப்பாக ஒருங்கிணைக்கும் வகையில், ஒரு கட்டுப்பாட்டு அணியை அமைக்க திட்டமிட்டுள்ளார்.
இதற்காக “தொண்டர் படை” என்ற பெயரில் தனிப்பட்ட குழு உருவாக்கப்பட உள்ளதாம். இந்த அணியின் முக்கிய பணி, கட்சி சார்பில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளிலும் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது ஆகும். கடந்த கரூர் நெரிசல் சம்பவத்தின் பின்னணி, இத்தகைய பாதுகாப்பு அமைப்பின் அவசியத்தை அதிகரித்துள்ளது.
இந்த தொண்டர் படையை முறையாக பயிற்சி பெற்ற அணியாக உருவாக்கும் நோக்கில், அவர்களுக்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. இது தொடர்பான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும், கட்சியின் அமைப்பை வலுப்படுத்தும் வகையில், 2-ம் கட்ட தலைவர்களின் பட்டியலும் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது. கட்சி நிர்வாகத்தினரிடையே இது உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது.
