நாடு முழுவதும் மக்களவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்ற வருகின்றன. தேர்தலில் வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டை என்பது அவசியம். வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டை மட்டும் இருந்தால் போதாது. வாக்காளர் பட்டியல் என்பது அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கிறது. பல காரணங்களால் சில பெயர்கள் காணாமல் போனது அல்லது பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது என பலமுறை நடைபெற்று உள்ளது. எனவே தேர்தலுக்கு முன்பு உங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா இல்லையா என்பதை நீங்கள் சரிபார்க்க வேண்டும்.

அதற்கு முதலில் என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை கண்டறிய கிடைக்கும் விருப்பங்களை கிளிக் செய்ய வேண்டும்.

அதாவது, Search by Details, Search by EPIC and Search by Mobile.

Search by Details:  : பெயர், குடும்பப்பெயர், பிறந்த தேதி போன்ற தேவையான விவரங்களை உள்ளிடவும். பிறகு கேப்ட்சாவை உள்ளிட்டு தேடல் பொத்தானை அழுத்தவும்.

Search by EPIC:  , EPIC எண் மாநிலம், கேப்ட்சா ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து தேடல் பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும்.

Search by Mobile.: மாநிலத்தையும் மொழியையும் தேர்ந்தெடுத்து  வாக்காளர் ஐடி மற்றும் கேப்ட்சாவுடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட்டு தேடல் பொத்தானை அழுத்தவும்.

தேடல் முடிவுகளில் உங்கள் பெயர் தோன்றினால், உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளது என அர்த்தம்.