தமிழகத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மதுரையில் ஏற்கனவே பறக்கும் பாலம் அமைக்கும் திட்டம் அமைக்க திட்டமிடப்பட்டு அதன் பிறகு கைவிடப்பட்டது. இந்த நிலையில் மதுரை நெல்பேட்டை முதல் விமான நிலையம் வரை உள்ள சாலைகளை நான்கு வழி சாலைகளாக மாற்றுவதற்கு தற்போது தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் மதுரையில் உள்ள பொதுமக்கள் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் விமான நிலையத்திற்கு வந்து செல்ல முடியும். இதற்கான முன்னேற்பாடு பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் மதுரை விமான நிலையத்தை பல்வேறு தரப்பட்ட மக்களும் பயன்படுத்தி வரும் நிலையில் அரசின் புதிய ஒப்புதலால் பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் குறையும் என கூறப்படுகிறது.