இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகத்தால் சீரழியும் குடும்ப உறவுகளுக்குச் சாட்சியாக, உத்தரப் பிரதேசத்தில் கணவர் ஒருவர் தனது மனைவி உயிருடன் இருக்கும்போதே அவருக்கு ‘பிண்ட தானம்’ செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. தனது மனைவி சமூக வலைதளங்களில் கவர்ச்சியாக நடனமாடி ரீல்ஸ் பதிவிடுவதை பலமுறை தடுத்தும், அவர் கேட்காததால் ஆத்திரமடைந்த கணவர், அவர் தனக்கு “இறந்துவிட்டதாக” கருதி இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
மேலும் ஆற்றங்கரையில் அமர்ந்து முறைப்படி ஈமச்சடங்குகளைச் செய்த அந்த நபர், மனைவியின் புகைப்படத்தை ஆற்றில் வீசி தனது உறவை முறித்துக்கொண்டார். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒருபுறம் கணவர் கண்ணீருடன் பிண்ட தானம் செய்யும் காட்சிகளும், மறுபுறம் அந்தப் பெண் சினிமா பாடல்களுக்கு ஆபாசமாக நடனமாடும் ரீல்ஸ் காட்சிகளும் தொகுக்கப்பட்டுள்ளன.
Husband performs Pind Daan for his wife in the river after failing to stop her from posting sleazy Instagram reels. Declares her ‘dead to him’ and throws her photo frame in.
Video shows the full ritual + her dance clips pic.twitter.com/Qz4Ei2YDpN
— Ghar Ke Kalesh (@gharkekalesh) May 9, 2026
“>
இந்நிலையில் “பலமுறை எச்சரித்தும் அவர் தனது நடத்தையை மாற்றிக்கொள்ளவில்லை, இனி அவருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என அந்த நபர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். டிஜிட்டல் மோகம் தம்பதிகளிடையே எத்தகைய மனக்கசப்பையும், விரிசலையும் ஏற்படுத்துகிறது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு கசப்பான உதாரணமாக மாறியுள்ளது.
