நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நேற்று நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கியது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இந்நிலையில் மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி சாதனை அறிவிப்பு என ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் பாராட்டினார். இது பற்றி அவர் கூறியதாவது, உலக நாடுகள் நெருக்கடியில் சிக்கி உள்ள நிலையில், மத்திய அரசின் அறிவிப்பு இந்தியாவை ஒளிரசெய்துள்ளது. பட்ஜெட் அறிவிப்பின் மூலம் உலக வளர்ச்சியின் எஞ்சினாக இந்தியா மாற உள்ளது. ரயில்வே துறைக்கு ரூ.2,14,000 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டது சாதனை அறிவிப்பு என்றார்.