இந்தியாவில் வங்கி கணக்குகளை விட தபால் நிலையங்களில் அதிக அளவிலான சேமிப்பு திட்டங்கள் உள்ளன. இதில் இணைய  மக்கள் பலரும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதன்படி அஞ்சல் அலுவலகத்தின் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் ஐந்து ஆண்டுகளுக்கு நல்ல வட்டியை தரக்கூடியது. மேலும் இதில் பணமும் பாதுகாப்பாக இருக்கும். தற்போது மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் 8.2 சதவீதம் வட்டி வழங்கப்பட்டு வரும் நிலையில் ஒருவர் இந்த திட்டத்தில் அதிகபட்சமாக 30 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.

குறைந்தபட்ச முதலீட்டு வரம்பு ஆயிரம் ரூபாயாகும். இந்த திட்டத்தில் காலாண்டு அடிப்படையில் டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு வட்டி வழங்கப்படும். 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய யார் வேண்டுமானாலும் இந்த திட்டத்தின் முதலீடு செய்து பயன்பெறலாம். அதேசமயம் விஆர்எஸ் எடுக்கும் சிவில் துறை அரசு ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் இருக்கும் ஓய்வு பெறுபவர்களுக்கு சில நிபந்தனைகளுடன் வயது தளர்வும் வழங்கப்படுகின்றது.