இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகள் மற்றும் பறவைகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு பகிரப்பட்டு வரும் நிலையில் இதனை ரசிக்க தனி ஒரு ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இன்று ஸ்மார்ட் போன் இல்லாத ஒருவரை கூட பார்க்க முடியாது. அப்படி ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் அனைவருமே பொழுது போக்காக ரீல்ஸ் வீடியோக்களை அதிகளவு விரும்புகின்றனர். அதிலும் குறிப்பாக விலங்குகள் மற்றும் பறவைகள் வேட்டையாடும் வீடியோக்கள் அதிகளவில் விரும்பப்படுகிறது. அதன்படி தற்போது நாரை ஒன்று மீனை வேட்டையாடிய பிறகு ராஜநடை போடும் காட்சி பார்வையாளர்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது.

நமக்கு ஏதாவது ஒன்று தேவைப்பட்டால் அது கிடைக்கும் வரை கஷ்டப்படுவோம். அது நம்முடைய கைக்கு கிடைத்து விட்டதும் நம்மை அறியாமல் ஒரு மகிழ்ச்சி வெளிப்படும். அப்படிதான் தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் heron வகையை சேர்ந்த வெள்ளை நிற நாரை ஒன்று தன்னுடைய பசிக்காக மீனை வேட்டையாடியுள்ளது. அந்த மீன் நாரையின் பிடியிலிருந்து தப்பிக்க போராடியது. ஆனால் நாரை மிகவும் சாமர்த்தியமாக மீனை தனது பிடிக்கு கொண்டு வந்துள்ளது. அதன் பிறகு மீனை பிடித்து விட்ட மகிழ்ச்சியில் நாரை ராஜநடை போட்டு உள்ளது. தற்போது அது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பலரையும் வியக்க வைத்துள்ளது.

 

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

Sam Rino பதிவைப் பகிர்ந்துள்ளார் (@samrinophotography)