பருப்பு என்பது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இருந்து வரும் நிலையில் இனி வரும் நாட்களில் பருப்பு விலை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பரந்த சில நாட்களாக பெய்த ஆலங்கட்டி மழை மற்றும் காரணமாக அறுவடைக்கு தயாரான பயிரின் சமீபத்திய இழப்புகள் பருப்பு விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

கர்நாடக மாநிலத்தில் பூஞ்சைகளின் தாக்குதல் காரணமாக விளைச்சலில் 30 சதவீதம் குறைந்துள்ளது. எதிர்பார்த்த அளவு விளைச்சல் இல்லாமல் குறைந்த அளவில் விளைச்சல் ஏற்பட்டதால் சனா விலை 6000 குவிண்டால் தாண்டும் என்றும் கூறப்படுகிறது. மூங், மைசூர், துவரை மற்றும் உளுந்து போன்ற பருப்புகள் கிலோ 130 முதல் 140 ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.