தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டம் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது வரை அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கான கோரிக்கையை அரசு நிறைவேற்றாமல் இருந்து வரும் நிலையில் அதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெறுகின்றன.

இந்த நிலையில் கோவாவில் உள்ள போக்குவரத்து ஊழியர்களுக்கு மாதாந்திர ஊழியத்தை உயர்த்துவதாக அரசு அறிவித்துள்ளது. மாநிலத்தில் ஒவ்வொரு வருடமும் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு 5% வரை ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது ஓட்டுநர்கள், உதவியாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு ஐந்தாயிரத்தி ஐநூறு ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை ஊதிய உயர்வு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள.